முச்சக்கரவண்டி விபத்து – நால்வர் காயம்…!!

Read Time:1 Minute, 28 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-6மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி இலுப்படிச்சேனையில் இன்று(02) முச்சக்கரவண்டி ஒன்று பாலத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் சாரதியுமாக மொத்தம் நான்கு பேர் காயமடைந்து கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வைத்திய அதிகாரி கே. சுகுமார் தெரிவித்துள்ளார்.

பாதையில் திடீரெனக் குறுக்கிட்ட நபரை விபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக முச்சக்கரவண்டியைத் திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்குள் வீழ்ந்ததாக முச்சக்கரவண்டியில் பயணித்தோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போதே சாரதிக்கும் அதில் பயணித்தோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதோடு, முச்சக்கர வண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் அதிக சம்பளம் பெறும் அரச தலைவர் யார் தெரியுமா?
Next post 20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்…!!