முல்லைத்தீவு மக்களுடன் மனம் திறந்து பேசிய வடக்கு முதல்வர்…!!

Read Time:1 Minute, 50 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் இனி வரும் காலங்களில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று(01) கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர் பொதுமக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு செல்வதற்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது, பொதுமக்களை அவர்களின் வாழ்விடங்களில் நிரந்தரமாக குடியமர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு இருக்கும் தடைகள், அச்சம் என்ன, என்பது தொடர்பாகவும் மற்றும் இராணுவத்தினர் மக்களின் இருப்பிடங்களை விட்டு வெளிசெல்லாது இருப்பதற்கு என்ன காரணம் என்பதை மிகத் தெளிவாக தனது மனம் திறந்து மக்கள் முன்னிலையில் எடுத்து கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

அத்துடன் குறித்த மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற நீதி மன்றங்களில் வழக்கு பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் குறித்த மீள்குடியேற்றத்தை விரைவு படுத்த முடியும் என்று அலோசனை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். வலிகாமத்தில் கடும் மழை…!!
Next post பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பிரச்சினைக்கு தீர்வு…!!