கிளிநொச்சி பொது வர்த்தக சந்தையை மீள நிர்மாணிக்க அமைச்சரவை தீர்மாணம்…!!

Read Time:1 Minute, 55 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90தீயினால் பாதிப்புக்கு உள்ளான கிளிநொச்சி பொது வர்த்தக சந்தை தொகுதிக்கான நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்துள்ளனர்.

பாதிப்படைந்த 122 கடைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட வியாபாரிகளுக்கு 74 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுக்கத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தீயனைக்கும் பிரிவென்றை 97 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தீயினால் பாதிக்கப்பட்ட கடை தொகுதியினை 150 மில்லியன் ரூபா செலவில் நிலையான பொதுச் சந்தை தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மாணம் கிளிநொச்சி பொது வர்த்தக சந்தை தொகுதியில் ஏற்பட்ட தீ தொடர்பில் அனர்த்த மதிப்பிடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளின் படி தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!
Next post இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி..!!