இலங்கையில் தாழிறக்கம் : புகையிரத சேவைகள் இரத்து…!!

Read Time:1 Minute, 39 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3நாட்டில் எற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சில பிரதேசங்களில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலை நாட்டு புகையிரத பாதையில் இஹல கோட்டே மற்றும் பலனவிற்கும் இடையிலான புகையிரத பாதையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக புகையிரத சேவை ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலை வழமைக்கு திரும்பும் வரை மலை நாட்டு புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிவிக்கவிருந்த கடுகதி புகையிரதம் மற்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு…!!
Next post திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: நடிகை சாய் பல்லவி…!!