யாழ். மாணவர்கள் மைத்திரி, ரணில், சம்பந்தனுடன் நாளை விசேட சந்திப்பு…!!

Read Time:1 Minute, 46 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-7யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை நாளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதியினை உரியமுறையில் பெற்றுத் தருமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளை முடக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் வலுப்பெறவே சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடனும், பல்கலை நிர்வாகத்துடனும் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார்.

குறித்த சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இரா.சம்பந்தனுடன் சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.நல்லூர் பகுதியில் வாள்களுடன் நடமாடும் இளைஞர்கள்…!!
Next post பியகமவில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு…!!