இந்தியாவின் வலியுறுத்தல் இதுவென்கிறார் து}துவர் நிருபமாராவ்

Read Time:1 Minute, 17 Second

indea-flag.gifஅர்த்தமற்ற இரத்தக்களரியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து இருதரப்பும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதே இன்றைய சூழ்நிலையில் காணப்படும் ஒரேயொரு தீர்வெனவும் ஐக்கிய இலங்கைக்குள் ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வினை உருவாக்க இருதரப்பும் முனைப்புடன் செயற்பட வேண்டுமெனவும் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் 60வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது செய்தியாளர்களுடன் உரையாடகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகள்சார்பு இணையதளங்கள்… முகவரி தேடும் பிச்சைக்காரர்களை விட கேவலமானவர்கள் -TMVPஐெயந்தன்
Next post இஸ்ரேல் எல்லை அருகே 15 ஆயிரம் வீரர்களை நிறுத்த லெபனான் ராணுவம் முடிவு