சவுதி கூட்டுப்படைகள் ஏமன் சிறை மீது வான்தாக்குதல்: 60 கைதிகள் கொன்றுகுவிப்பு..!!

Read Time:3 Minute, 43 Second

201610310924314346_saudi-led-airstrikes-on-yemen-prison-kill-at-least-60_secvpfஏமன் நாட்டில் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவந்த அதிபர் மன்சூர் ஹாதியை ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சியில் இருந்து விரட்டினர். அவர் தற்போது, சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இருக்கிறார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தலைநகர் சனாவையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். அங்கு தொடர்ந்து அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டுள்ளனர். 31 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த சண்டையில், அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து வான்தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவருவது கடும் அதிருப்தியை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் அங்கு ஒருவரது மரணத்தை தொடர்ந்து இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு அரங்கத்தில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் 140 பேர் கொன்று குவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. தவறான தகவலின்பேரில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டு விட்டது என சவுதி கூட்டுப்படையினர் கூறினர்.

இந்த நிலையில் அங்கு அதிபர் ஆதரவு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான 72 மணி நேர சண்டை நிறுத்தம் முடிந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ஹூதய்தா என்ற இடத்தில் உள்ள சிறை வளாகத்தின் மீது சவுதி கூட்டுப்படையினர் 3 முறை வான்தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 60 கைதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த வான்தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, சிகிச்சை தரப்படுகிறது.

இந்த வான்தாக்குதல் நடைபெற்றபோது சிறையில் 84 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஏமனுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் இஸ்மாயில் குல்டு ஷேக் அகமது அளித்த புதிய சமரச திட்டத்தை அதிபர் மன்சூர் ஹாதி நிராகரித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளவுக்கு அதிகமாக உறவில் ஈடுபடுவது தாக்கத்தை உண்டாக்குமா?
Next post வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு…!!