மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா? இதை மறக்காம படிங்க…!!

Read Time:3 Minute, 48 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1ஒரு மனிதனின் எண்ணம், செயல், குணநலன், ஆளுமை திறன் போன்ற விடயங்கள் தான் ஒருவன் சமுதாயத்தில் எப்படிப்பட்ட நிலையில் வாழுகிறான் என்பதை மற்றவர்களுக்கு காட்டும்.

நாம் அணியும் உடைகள், பேசும் வார்தைகள், பேசும் முறை என நாம் செய்யும் ஒவ்வொரு விடயமும் எல்லோருக்கும் பிடிக்கும் விதத்திலும், ஈர்க்ககூடியதாகவும் இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்ப்போம்.

மேலே கூறப்பட்ட திறமைகளை நாம் அதிக அளவில் வளர்த்து கொள்ள சில வழிகள்:

எல்லா விடயங்களிலும் நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்ற நம்மை பற்றி நாமே புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நாம் நாமாக இருப்பது முக்கியம். அதாவது, நமக்கு வசதியில்லாத, விருப்பமில்லாத விடயத்தை நம் மேல் நாமே திணித்து கொள்ள கூடாது. நமக்கான தனித்தன்மையையும் நாம் எப்போதும் இழக்க கூடாது.

அடுத்தவர்களுக்க்கு எப்போதும் மரியாதை கொடுப்பது அவசியம். இது நம் மீதான அவர்களின் மதிப்பை உயர்த்தும். அடுத்தவர்கள் எதாவது நல்ல விடயங்களை மேற்கொண்டால் பாராட்ட தவறாதீர்கள்.
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நாம் மற்றவார்களிடம் பேசும் போது அவர்கள் பேச்சையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அதாவது மற்றவர்கள் சொல்லுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனின் மிகப் பெரிய சொத்தாகும். நாம் எந்த விடயத்தையும் நம்மால் முடியாது என நினைக்க கூடாது. தன்னம்பிக்கை கொண்டு அதை ஜெயித்தால் இந்த உலகம் நம்மை பாராட்ட தயங்காது.

எப்போதும் புதிய மனிதர்களை சந்திப்பது அவசியமாகும். ஏனென்றால் எல்லாரிடத்திலும் கற்பதற்கு நிச்சயம் விடயங்கள் இருக்கும் என்பதை மறவாதீர்கள்.
சோகமாக, அதிகம் பேசாமல் இருப்பவர்களை யாருக்கும் பிடிக்காது. நாம் எல்லாரிடமும் சகஜமாக பேச வேண்டும் நம் ஹியூமர் சென்ஸை வளர்த்து கொள்வது நல்ல விடயமாகும்.

புதிய விடயங்களை தொடர்ந்து நாம் கற்று கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த உலகமானது தொடர்ந்து அப்டேட் ஆகி வருகிறது என்பதை மறக்காதீர்கள்.

மக்களை சந்தியுங்கள், அதிகம் புத்தகம் வாசியுங்கள், முடிந்த வரை அனைவருக்கு உதவுங்கள், பயணம் மேற்கொள்ளுங்கள்

எப்போதும் எல்லா விடயங்களையும் பாசிடிவாகவே பாருங்கள், அதையே மற்றவர்களுக்கும் பரப்புங்கள். இந்த உலகம் நம் கையில்!.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோகத்தில் இருக்கின்றீர்களா? இதோ விழுந்து விழுந்து சிரிக்க சூப்பர் டூப்பர் பல்ப்ஸ் காட்சிகள்…!! வீடியோ
Next post சிம்பு தனது வாழ்நாளில் சாதிக்க விரும்பும் ஐந்து விஷயங்கள்…!!