கத்தியால் தாக்க முயன்ற பாலஸ்தீனர் மீது துப்பாக்கிச் சூடு: இஸ்ரேல் ராணுவம்…!!

Read Time:2 Minute, 12 Second

201610291455240002_palestinian-attacker-shot-by-israeli-troops-army_secvpfஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சை காரணமாக ஜெருசலேமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இரண்டு சமூகத்தினரும் வழிபடக்கூடிய வழிப்பாட்டுதளங்கள் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தான். ஜெருசலேமில் உள்ள அல் அசா மசூதி முஸ்லிம்கள் கட்டுபாட்டில் உள்ளது. அதேசமயம் அந்த வளாகம் யூதர்களின் புனித இடமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ஜெருசலேமின் மேற்கு கரை (வெஸ்ட் பேங்) பகுதியில் இஸ்ரேல் ராணுவ படைகளின் மீது பாலஸ்தீனியர் ஒருவர் தனது காரினை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டார். பின்னர் அவர் கத்தியால் குத்தவும் முயன்றார்.

இதனையடுத்து தாக்குதலில் ஈட முயன்ற பாலஸ்தீனரை இஸ்ரேல் படையினர் சுட்டனர். இதில், பாலஸ்தீனருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இதுபோன்று பல்வேறு சம்பங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகப்படியாக தாக்குதலில் ஈடுபட முயன்ற பாலஸ்தீனர்கள் அதிக அளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களில் 235 பாலஸ்தீனர்களும், 36 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு அமெரிக்கர்கள், ஒரு ஜோர்தனியன், எரிடிரியன் மற்றும் சூடான் நாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து: சிகாகோ விமான நிலையத்தில் பரபரப்பு…!!
Next post பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி- 16 பேர் காயம்…!!