பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பான வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…!!

Read Time:1 Minute, 29 Second

201610290317066521_pakistani-military-action-against-militants-rejected-on-case_secvpfகாஷ்மீர் மற்றும் இந்திய நகரங்களில் நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக, எல்லை பகுதியில் முகாமிட்டு சதி செய்த பயங்கரவாதிகள் மீது சமீபத்தில் ராணுவம் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்னும் துல்லிய தாக்குதல்கள் நடத்தியது. இதில் 38 பயங்கரவாதிகள், ஒரு பாகிஸ்தானிய சிப்பாய் கொல்லப்பட்டனர். 7 முகாம்கள் நிர்மூலமாக்கப்பட்டன.

இந்த ராணுவ நடவடிக்கையையும், இதுபோன்ற பாதுகாப்பு படையினரின் பிற நடவடிக்கைகளையும் அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனோகர்லால் சர்மா என்ற வக்கீல் பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கை தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதிகள் சந்திரசூட், நாகேஷ் வரராவ் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவில், இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியற்றது, அடிப்படையற்றது என நீதி பதிகள் கூறி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்த்தாண்டம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி சிறைவைத்து கற்பழிப்பு: கட்டிட தொழிலாளி கைது…!!
Next post அன்று அவமானத்தின் அடையாளம்..! இன்று உலகமே பாராட்டும் பிரபலம்…!!