ஓடிப்போய் திருமணம் செய்த ஜோடியை தேடிப்பிடித்து கவுரவக் கொலை: பாகிஸ்தானில் கொடுமை…!!

Read Time:3 Minute, 32 Second

201610282018105686_couple-shot-dead-in-pak-in-honour-killing-case_secvpfபாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இந்த நூற்றாண்டிலும் கவுரவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோரே கொலை செய்தது, இளம்பெண்ணின் கழுத்தை அவளது சகோதரனே அறுத்துக் கொன்றது, இரண்டு தங்கைகளை சுட்டுக்கொன்றது என பல்வேறு சம்பங்களின் பின்னணியில் இருந்த ஒற்றை வார்த்தை ‘குடும்ப கவுரவம்’. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்று கவுரவக் கொலை செய்வோரை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் சட்ட மசோதாவும் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் பழமை மாறாத சமூகத்தினரிடையே இதுபோன்ற கொடுமைகள் குறைந்தபாடில்லை.

அவ்வகையில் கராச்சி அருகே நேற்று முன்தினம் நடந்த ஒரு சம்பவம் பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையே கலக்கமடையச் செய்துள்ளது. இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கராச்சி அருகில் உள்ள ஷா லத்திப் நகரைச் சேர்ந்த அஜமத் (வயது 30), இர்பானா (வயது 18) ஆகியோர் காதலித்துள்ளனர். குடும்பத்தினருக்கு இது பிடிக்காததால் கடந்த ஓராண்டுக்கு முன் ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டு ஆரங்கி நகரில் உள்ள பனாரஸ் காலனியில் வசித்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட இருவரின் குடும்பத்தினரும் அவர்களை நைசாகப் பேசி ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.

‘உங்களின் எல்லா தவறுகளையும் நாங்கள் மன்னித்துவிடுவோம், நமது சமூக பஞ்சாயத்தில் (ஜிர்ஜா) முறையிட்டு பிரச்சினையை தீர்த்துக்கொண்டால் மட்டும் போதும்’ என்று கூறியுள்ளனர்.

அதனை நம்பி பஞ்சாயத்தில் ஆஜரானபோது, அவர்களிடம் விசாரித்த பஞ்சாயத்தார், தடாலடியாக அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக அறிவித்தார். காதலித்து ஊரைவிட்டு ஓடிப்போனதால் அவர்களின் குடும்பத்திற்கு தீராத அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி இந்த தண்டனையை வழங்கியுள்ளனர். அதன்படி இளம் தம்பதியரை மூன்றுபேர் சேர்த்து சுட்டுக் கொன்றுள்ளனர்.

சடலங்களை அவர்களின் குடும்பத்தினர் வாங்கிக்கொண்டு உள்ளூர் சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

தற்போது அந்த உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்காக கோர்ட்டில் அனுமதி வாங்கியுள்ளோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்திருக்கிறோம்.

இவ்வாறு காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியாசமாக பண மோசடி செய்த நபர் சிக்கினார்…!!
Next post சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை-தர்ணா…!!