இது ரொம்ப சிம்பிள்! கடலை மாவு பேஷியல்…!!

Read Time:2 Minute, 54 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள்.

அவர்கள் அழகிற்கு பெருமதிப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண்டும் என்பதும், மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பாகும்.

ஆனால், இன்றைய காலத்தில் மாசுபட்ட காற்றினால் முகத்தில் முகப்பரு, கருவளையம் என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதிலிருந்து, தங்களது அழகினை பேணிக்காப்பதற்கு பெரும்பாலான பெண்கள் அழகு நிலையத்தினை தான் நாடுகிறார்கள்.

இயற்கையிலேயே வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே முகத்தினை பொலிவாக்கலாம்.

ஆம், அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.

இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சருமம் சுருக்கமின்றி இளமையோடு இருக்கும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகவும் இளமையாகவும் இருக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபாவளிக்கு முந்தைய நாளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 200 கோடி ரூபாய் மதிப்புக்கு எரிபொருள் வீண்…!!
Next post ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தை அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு…!!