ஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் – ஒரு பார்வை…!!
பரதன் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று இரவு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர்.
இந்த டீசரில் விஜய் வித்தியாசமான தலைமுடி ஸ்டைலுடன் வந்திருக்கிறார். அவருக்கே உரித்தான மாஸ் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷின் அழகான முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் டீசரின் பின்னால் ஒலிக்கும் ‘யார்ரா யார்ரா இவன்… ஊரைக் கேட்டா தெரியும்’ பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி.
டீசரின் ஆரம்பத்திலேயே விஜய் எதிரியை சுழற்றிவிட்டு அடிக்கும் காட்சி, தோளில் பை ஒன்றை தொங்கப் போட்டுவிட்டு பைக்கில் விஜய் வரும் காட்சி, கத்தியை கையில் வைத்து சுழற்றும் காட்சி, எதிரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவனுக்கே குறி வைப்பது, பாடல் காட்சியில் சிலம்பம் சுற்றுவது என விஜய்க்குண்டான மாஸ் காட்சிகள் எல்லாம் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது.
அதேபோல், ‘தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்கு தான் ‘அல்லு’ அதிகமா இருக்கணும்’ ‘இன்றைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று என்கிட்ட இருக்கு’ என்று டீசரில் விஜய் பேசும் வசனங்கள் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தத்தை எகிறவிடும். மொத்தத்தில் இந்த டீசர் விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
முதலில் இந்த டீசரை நேற்று நள்ளிரவு வெளியிடுவதாகத்தான் முடிவு செய்திருந்தால்கள். ஆனால், இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு 9.30 மணிக்கு வெளியிட்டனர். டீசர் வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே டீசரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறிக்கொண்டே போனது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணி வரை இந்த டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தின் டீசர் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது. தற்போது இந்த ஆண்டிலேயே விஜய்யின் ‘பைரவா’ படத்தின் டீசரும் பெரிய சாதனைகளை படைக்கும் என்று கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating