மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை..!!

Read Time:2 Minute, 26 Second

201610280012097383_41-years-old-indian-woman-sentenced-to-death-in-malaysia-for_secvpfமலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் அழகு நிலையம் நடத்திய சங்கீதா சர்மா (வயது 41) கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி மலேசியா சென்றார். அங்குள்ள பினாங் சர்வதேச விமான நிலையத்தில் இவரது உடமைகளை சோதித்த போது, அவர் வைத்திருந்த பெட்டியில் 1.6 கிலோ மெதாம்பெடமைன் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கீதா சர்மாவை கைது செய்த அதிகாரிகள், அவர் மீது அபாயகரமான போதைப்பொருள் கடத்தல் தடுப்புச்சட்டம் 1952-ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுவோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். அதன்படி சங்கீதா மீதான வழக்கு விசாரணை பினாங் மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், சங்கீதா சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஆஷ்மி அரிபின் உத்தரவிட்டார்.

சங்கீதா மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்தவித சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிபதி ஆஷ்மி, சங்கீதாவின் பெட்டியில் போதைப்பொருள் இருந்தது அவருக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறினார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி சங்கீதா சர்மா பினாங் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தீர்ப்பை விளக்கி கூறினார். அதை அமைதியாக கேட்டுக்கொண்ட சங்கீதா, பின்னர் கதறி அழுதார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் பள்ளிக்கூடம் மீது தாக்குதலில் 35 பேர் பலி – வேண்டுமென்றே நடத்தி இருந்தால் இது போர்க்குற்றம் என ஐ.நா. கருத்து..!!
Next post புரியாத புதிரான விஜய் சேதுபதியின் மெல்லிசை…!!