கள்ளத் தொடர்பை போட்டுக் கொடுத்த கில்லாடி கிளி…!!

Read Time:2 Minute, 54 Second

26-parrot1மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம் குவைத்தில் வியப்பை ஏற்படுத்தியது.

குவைத் நகர்ப்பகுதியில் வசித்து வரும் ஒரு பெண், தனது கணவருக்கும், வேலைக்காரப் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருக்கலாம் என நீண்ட நாட்களாக சந்தேகப்பட்டுள்ளார்.

சில சம்பவங்கள் இதனை உறுதி செய்துள்ளன. இருப்பினும், அவர்களுக்கு இடையேயான தொடர்பை ஆதாரத்துடன் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனிடையே அந்தப் பெண் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். பொதுவாக கிளிக்கு பேச பழக்கினால் அது நாம் சொல்லுவதை அப்படியே திருப்பி சொல்லும்.

இந்த நிலையில், அப்பெண்ணின் கணவரும், வீட்டு வேலைக்காரப் பெண்ணும் பேசிக் கொண்ட சில சுவாரஷ்யமான அந்தரங்க வார்த்தைகளை கிளி அப்படியே பேசிக் காட்டியுள்ளது. முதலில் இது புரியாவிட்டாலும், சிறிது நேரத்தில் கிளியின் பேச்சை முழுவதுமாகப் பதிவு செய்து, அந்த பெண் சரிபார்த்தார்.

பின்னர் அந்த பெண்ணின் கணவர் தான் இவ்வாறு பேசியது தெரியவந்தது. கிளியின் பேச்சுத்தான் கடைசியில் கணவருக்கு வினையாக மாறியது. ஏற்கனவே கணவர் மீது சந்தேகப்பட்ட மனைவி, இதன் மூலம் தனது சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.

ஒருநாள் வழக்கமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நேரத்திலிருந்து சற்று முன்னதாகவே வீட்டுக்குவர கணவர் மாட்டிக் கொண்டுள்ளார். உடனடியாக கணவர் மீது அப்பெண் ஹவாலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் போலீஸாரோ, ‘கிளியின் சாட்சி நம்பத்தகுந்ததாக நீதிமன்றத்தில் ஏற்கப்படாது.

ஒருவேளை எதிர்தரப்பு வழக்கறிஞர் டிவி நிகழ்ச்சியையோ அல்லது ரேடியோ நிகழ்ச்சியை கேட்டோ அந்த வார்த்தைகளை கிளி பேசியிருக்கிறது என வாதிட்டால் வழக்கு எடுபடாமல் போய்விடும்’ எனக் கூறி வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதனால் தப்பினார் அந்த கணவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 60 வயது முதியவர் மனைவியை வெட்டி, குத்தி, அறுத்துக் கொடூர கொலை…!!
Next post பெண்களின் என்றென்றும் இளமைக்கு தாம்பத்யம்…!!