கொழும்பு தொடர்மாடியில் பாரிய தீப்பரவல் – உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா?

Read Time:1 Minute, 26 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5கொழும்பு – பம்பலப்பிட்டி, டுப்ளிகேட் மாவத்தையில் உள்ள தொடர்மாடி கட்டடம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தின் 5ஆவது மாடியில் இன்று காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த கட்டடத் தொகுதியின் தீப்பரவலுக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தீப்பற்றியுள்ள இடத்தில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்ற விடயம் இதுவரை அறியப்படவில்லை.

புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளதால் அந்த பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸாரின் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் படுகாயம்…!!
Next post விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என முறைப்பாடு…!!