இன்றைய சினிமா வர்த்தகமயமாகி விட்டது: ஜெயா பச்சன் வேதனை…!!

Read Time:3 Minute, 29 Second

201610261729358765_filmmaking-all-about-business-today-jaya-bachchan_secvpfமும்பையில் நடைபெற்றுவரும் ‘ஜியோ மாமி’ திரைப்பட விழாவில் நேற்று பங்கேற்று பேசிய ஜெயா பச்சன் கூறியதாவது:-

எங்கள் காலத்திலும், அதற்கு முன்னதாகவும் சினிமாத்துறையில் இருந்தவர்கள் உண்மையான உத்வேகத்தால் உந்தப்பட்டு, நாட்டுக்கு தேவையான கதைகளை மையப்படுத்தி படம் எடுத்தனர்.

அந்தக்கால எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்-நடிகையர் மற்றும் இந்ததுறையை சேர்ந்த அனைத்துவகை கலைஞர்களுக்குள்ளும் பலவிதமான உணர்வுகள் இருந்தன. அவற்றை மையப்படுத்தி அவர்கள் சினிமாப் படங்களை எடுத்தனர்.

அவர்கள் வாழ்ந்த காலத்தை அந்தப் படங்கள் எல்லாம் பிரதிபலித்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாகவோ, அதிர்ஷ்டவசமாகவோ (எதிர்காலத்தில்) சினிமாவுக்கு என்ன நேரும்? என்பதை அவர்கள் பேசவில்லை.

அவர்களின் அந்த படைப்பாற்றல் இன்றைய சினிமா படைப்பாளிகளைப்போல் இல்லாமல் நல்ல சினிமாக்களை நமக்கு தந்தது. மிகமுக்கியமாக, அவர்கள் எல்லாம் வியாபாரிகளாக இல்லாமல் படைப்பாளிகளாக இருந்தனர்.

அந்தக்கால சினிமாக்காரர்கள் வியாபரம் செய்யவில்லை. கலையை உருவாக்கினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய சினிமாக்காரர்களின் தேவை வேறுவிதமாக மாறிவிட்டது. இன்றைய சினிமாவில் எல்லாமே வியாபாரமாகி விட்டது. இன்றைய பாலிவுட் படங்கள் ஆங்கில படங்களைப்போல் உள்ளன. அவை இந்தியப் படங்கள்போல் தெரிவதில்லை.

நமது சினிமாக்களில் இன்று எத்தனை காதாபாத்திரங்கள் உள்ளன?, ஆணோ, பெண்ணோ, எந்த கதாபாத்திரமாவது நமதுநாட்டை பிரதிபலிக்கின்றதா? மேற்கத்திய நாடுகளில் உள்ள கதாபாத்திரங்கள்போல் தெரிகிறதேயொழிய இந்திய முகமாக தோன்றவில்லை.

கலைநுணுக்கங்களை மக்கள் மறந்து விட்டனர். வெளிப்படையாக, வெட்கமற்ற முறையில் அன்பை வெளிப்படுத்துவது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் கதை சொல்ல விரும்புகிறாரா? அல்லது, நடிகர்-நடிகையர்களை காட்ட விரும்புகிறாரா? என்பது முக்கியமானது. பிரபலமான நட்சத்திரங்களை போட்டு உங்கள் படத்தில் பாரத்தை கூட்டினால் அது பிரச்சனையாகிவிடும்.

ஆனால், தனது படத்தின் மூலமாக ஒருகதையை சொல்ல விரும்பும் தயாரிப்பாளர் அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் நல்ல வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுக்கடலில் ராட்சத சுறாவிற்கு உணவாகும் மாடு… மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ
Next post இரத்தம் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது..!!