அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ஓடும் லாரி மூலம் 45 ஆயிரம் ‘பீர்’ கேன்கள் சப்ளை…!!

Read Time:1 Minute, 38 Second

201610261125307874_self-driving-truck-makes-45-thousand-beer-cans-supply-in-us_secvpfடிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது டிரைவர் இன்றி தானாகவே ஓடக்கூடிய லாரி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த லாரி அமெரிக்காவில் தானாக ஓடி பீர்கேன்கள் சப்ளை செய்துள்ளது. ‘ஓட் டோ’ எனப்படும் அந்த லாரி கொலரோயாவில் இருந்து கொலரோடா ஸ்பிரிங்ஸ் என்ற இடத்துக்கு 45 ஆயிரம் பீர் கேன்களை பத்திரமாக ஏற்றிச் சென்று ஒப்படைத்தது.

இது சுமார் 193 கி.மீட்டர் தூரத்தை மணிக்கு 89 கி.மீ வேகத்தில் 2 மணி நேரத்தில் சென்றடைந்தது. இது வர்த்தக துறையில் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

உபெர் மற்றும் அன்கியுசர் புஸ்க் நிறுவனத்தினர் டிரைவர் இன்றி ஓடும் இந்த லாரியை தயாரித்துள்ளனர். அதில் உள்ள வழிகாட்டும் காமிராக்கள், ரேடார் மற்றும் சென்சர் எனப்படும் உணர்வுக்கருவிகள் ரோட்டின் வழிகளை படித்து அறிந்து செல்ல உதவுகின்றன.

இந்த லாரி மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சென்றது. இதில் உள்ள தூங்கும் வசதி படுக்கையில் படுத்தபடி டிரைவர் ஒருவர் கண்காணித்த படியே வந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து: 2 மணி நேரத்தில் முடிந்து போன மணவாழ்க்கை…!!
Next post ஆழ்வார்திருநகரி அருகே மூதாட்டி அடித்துக்கொலை…!!