நட்பாக இருந்த உறவு காதலாக மாறியது எப்படி?

Read Time:3 Minute, 22 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90ஒரு ஊரில் சிவா மற்றும் பவித்ரா என்ற ஒரு பையனும் பெண்ணும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நல்ல நண்பர்களாக பழகி வந்தார்கள். சிவா நடுத்ததர குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்தான்.

ஆனாலும் அவர்கள் சந்தோஷமாக நாட்களை கழித்து வந்தார்கள்.

ஒரு நாள் சிவாவின் அம்மா இறந்து விட்டாள். சோகத்தில் இருந்த அவன் காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்பட்டான்.

அப்போழுது சிறு வயதில் பழகிய அவனுடைய தோழி பவித்ரா மிகவும் வசதியான வீட்டு பெண். அவள் சிவாவை காரில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றாள்.

அவள் சிவாவின் தாயைப் போல அவனை நன்றாக பார்த்துக் கொண்டாள்.

அதிலிருந்து சிவா தனக்கு அம்மா இல்லை என்ற கவலை மறந்து மிகவும் சந்தோஷமாக இருந்தான்.

காலங்கள் ஓடின… சிவா தன் தோழி பவித்ரா மீது வைத்திருந்த அன்பு காதலாக மாறியது.

அவளிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் நாளுக்கு நாள் சிவா தவித்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் மிகவும் மனக் குழப்பத்தில் இருந்த சிவாவுக்கு ஒரு முடிவு கிடைத்தது.

பவித்ரா தன்னுடைய காதலி அவள் தான் இனிமேல் தன் உலகம் என்று முடிவு செய்து அவளிடம் தன்னுடைய காதலை சொல்ல வேண்டும். என்று முடிவு செய்து இருந்தான்.

ஒரு நாள் இருவரும் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்கள்.

உடனே சிவா அதுதான் சரியான தருணம் என நினைத்து தனது காதலை எப்படியாவது பவித்ராவிடன் கூற வேண்டும் என்று ஒரு சிறிய பேப்பரில் எழுதி பவித்ராவின் கையில் கொடுத்தான்.

பவித்ரா அந்த பேப்பரை பிரித்து பார்க்காமல், தனது காரை நிறுத்தி சிவாவை இறக்கி விட்டாள்.

அப்போது அந்த காருக்கு பின்னால் வந்த ஒரு கார் சிவாவின் மீது மோதியதால் அவன் பவித்ராவின் கண் எதிரே இறந்து விட்டான்.

அப்போது பதட்டத்தில் இருந்த பவித்ரா சிவா கொடுத்த கடிதத்தை பிரித்து படித்தாள்.

அதில் ” நீ என்னை விட்டு பிரியும் மறு கணமே என் உயிர் பிரியும் ” என்று எழுதியிருந்தது.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமெடி நடிகர் வடிவேலு வில்லன் ஆனார்?
Next post நடுக்கடலில் ராட்சத சுறாவிற்கு உணவாகும் மாடு… மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ