பிரபு சாலமன் படத்தில் மீண்டும் இணையும் சந்திரன் – ஆனந்தி…!!

Read Time:3 Minute, 23 Second

201610261251002368_chandran-anandhi-again-joint-to-sattai-director-movie_secvpfபிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த ‘கயல்’ படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமானவர்கள் சந்திரன் – ஆனந்தி. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். சமுத்திரகனி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த ‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கும் ‘ரூபாய்’ படத்தில்தான் இருவரும் கதாநாயகன் – கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தை பிரபு சாலமன் தயாரிக்கிறார்.

மேலும், இப்படத்தில் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரிஷ் உத்தமன், மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இளையராஜா ஒளிப்பதிவை அமைக்கிறார். படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘சாட்டை’ படம் எனது முதல் படம். இதுவும் எனது முதல் படம் தான். ஏனென்றால் அதுவேறு கதை களம், இது வேறு கதை களம். பணத்தாசை தான் எல்லா தீமைகளுக்கும் ஆணி வேர்.

தேனியில் லாரி டிரைவராக இருக்கும் பரணி – பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு லாரி மட்டும் தான். அந்த லாரிக்கு பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக கோயம்பேடு மார்கெட் வருகிறார்கள். ஊர் திரும்பும் போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்கு போனார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

பணம் நிம்மதி தராது என்று எந்த ஒரு ஏழையும் சொல்வதில்லை! நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்த பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை! இப்படி எல்லோரது வாழ்க்கையிலும் இன்றியமையாகிப்போன பணத்தை பற்றிய ஒரு பயணம் தான் இந்த ‘ரூபாய்’. இதில் காமெடி, காதல் கலந்து உருவாக்கி உள்ளோம். படப்பிடிப்பு சென்னை, மூணாறு, மறையூர், தேனி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார்.

காட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு சாலமன், ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.ரவிச்சந்திரன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தை E5, ஜேகே குரூப் டாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன், காஸ்மோ வில்லேஜ் சிவகுமார் இருவரும் இணைந்து உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களனி பல்கலைக்கழகத்தில் தீ விபத்து…!!
Next post கண்களுக்கு அடியில் சதைப் பை தொங்குகிறதா? ஆரம்பத்திலேயே கவனிங்க…!!