திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மணிமண்டபம் திறப்பு விழாவில் 40 மாணவிகள் திடீர் மயக்கம்…!!

Read Time:2 Minute, 18 Second

201610241920540572_trichy-bharathidasan-university-opening-ceremony-40-student_secvpfதிருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பாரதிதாசன் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மண்டபத்தை திறந்து வைத்தார். துணை வேந்தர் முத்துக்குமார், பல் கலைக்கழக பதிவாளர் திருச்செல்வம், கலை விழா உயர்மட்டக்குழு உறுப்பினர் முருகேஸ்வரி, கலைப்பண் பாட்டுக்குழு ஒருங்கி ணைப் பாளர் லட்சுமிபிரபா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் நடனப்போட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் புதிதாக கட்டப்பட்ட ஆடிட்டோரியத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்று விதவிதமான நடனங்களை ஆடினர்.

இந்த புதிய ஆடிட்டோரியம் சிறிதாக இருந்ததாலும், காற்றோட்ட வசதி இல்லாததாலும் மாணவ, மாணவிகள், நிகழ்ச்சியை காண வந்தவர்களின் கூட்டத்தால் திணறியது. அறைக்குள் காற்று இல்லாததால் நடனப்போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

நிகழ்ச்சியை காண வந்தவர்களும் மயங்கினர். சுமார் 40 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கலை விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

இனி வரும் காலங்களில் காற்றோட்ட வசதியுடன் அறைகளை கட்ட வேண்டும். இதுபோன்ற விழாக்கள் நடைபெறும் போது அவசர சிகிச்கைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களே உஷார்! இதய நோய்களை தோற்றுவிக்கும் மாதவிடாய் நிறுத்தம்…!!
Next post படுகொலை விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்…!!