அமெரிக்காவில் தமிழர்கள் ஏற்பாடு செய்த அம்மணி சிறப்பு காட்சி…!!

Read Time:2 Minute, 1 Second

201610241307430705_ammani-special-show-in-us_secvpfலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘அம்மணி’. பெற்றப்பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் அம்மாக்கள் கதை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலக தமிழர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்ஜோஸ் நகரில் சிறப்பு திரைப்படமாக திரையிடுகிறார்கள்.

இந்த நகரில் வாழும் தமிழர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை இந்திய கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் ஐ.எல்.எப். அமைப்புக்கு வழங்குகிறார்கள். ‘அம்மணி’ படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன், “அம்மணி படத்துக்குப் பிறகு என்னுடைய குரல் பலருடைய கவனத்தை ஈர்த்து இருப்பதை நான் முழுமையாக உணர்கிறேன். உலக அளவில் அனைவராலும் ‘அம்மணி’ படம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ரசிகர்களிடம் இருந்து வரும் வாழ்த்துக்களும், கருத்துக்களும் இதற்கு உதாரணம்.

எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவியாக இருந்த கணவர், மகள், மருமகன் ஆகியோருக்கும் நன்றி. இவை அனைத்தையும் முடிவு செய்து நடத்தியது இறைவன். எனவே இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டியது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 17 அரிய புகைப்படங்கள்…!! வீடியோ
Next post பெண்களே உஷார்! இதய நோய்களை தோற்றுவிக்கும் மாதவிடாய் நிறுத்தம்…!!