பாகுபலி-2: பிரபாஸ் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த ராஜமௌலி…!!

Read Time:2 Minute, 4 Second

201610221823050433_baahubali-2-first-look-finally-revealed_secvpfராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகத்தை அதைவிட படக்குழுவினர் உருவாக்கி வருகின்றனர்.

முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் மன்னன் அமரேந்திர பாகுபலியை கட்டப்பா கொல்வது போல ராஜமௌலி படத்தை முடித்திருந்தார். இதனால் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் ஜியோ மாமி 18-வது திரைப்பட விழாவில் ‘பாகுபலி-2’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. நாயகன் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்து தரும் விதமாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

கையில் இரும்பு சங்கிலியை சுற்றிக்கொண்டு உடல் முழுவதும் லேசான காயங்களுடன் பிரபாஸ் நடந்து வர, பின்னணியில் மின்னல்களுக்கிடையே மன்னன் அமரேந்திர பாகுபலி முகம் தோன்றுவது போல வெளியான பர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதனால் #Baahubali2FirstLook என்னும் ஹெஷ்டேக் இணையம் மற்றும் சமூக
வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்புக்கு புதிய வழி: மோட்டார் சைக்கிள் திருடனுக்கு வாந்தி ஏற்படுத்தும் புதிய பூட்டு…!!
Next post தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய மகன் துடிக்க துடிக்க இறந்த காட்சி…!! வீடியோ