பாதுகாப்புக்கு புதிய வழி: மோட்டார் சைக்கிள் திருடனுக்கு வாந்தி ஏற்படுத்தும் புதிய பூட்டு…!!

Read Time:2 Minute, 13 Second

201610221140457251_bicycle-lock-sprays-thieves-with-vomit-inducing-gas_secvpfமோட்டார் சைக்கிள்களை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க புதுவிதமான பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பூட்டை கள்ள சாவி போட்டு திறந்தாலோ அல்லது உடைத்தாலோ ஒருவிதமான துர்நாற்றத்துடன் ‘கியாஸ்’ வெளிப்படும். ஒரு விதத்தில் அது ‘மிளகுப் பொடி’ போன்று மிக கடுமையான நெடியுடனும் இருக்கும்.

அதை சுவாசிப்பவர்களுக்கு வாந்தியும் தொடர்ந்து பல வித உடல் கோளாறுகளும் ஏற்படும். மேலும் இந்த பூட்டை அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது. அதன் மூலம் மோட்டார் சைக்கிளை திருட்டில் இருந்து காப்பாற்ற முடியும்.

இந்த புதுவிதமான பூட்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் டேனியல் இட்ஸ்கோவ்ஸ்கி மற்றும் அவரது நண்பரால் தயாரிக்கப்பட்டது.

ஒரு தடவை இவர்களது நண்பர் ஒருவர் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடி சென்று விட்டனர். எனவே, புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினர். அதை பாதுகாக்க புதிதாக 2 பூட்டுகளையும் வாங்கினார்.

ஆனால் அவற்றாலும் பயன் எதுவும் இல்லை. எனவே டேனியல் இட்ஸ்கோவ்ஸ்கி புதிதாக ஆலோசித்து இந்த நவீன பூட்டை உருவாக்கினர். இதை சாதாரணமாக உடைக்க முடியாது. அப்படி உடைத்தாலும் சம்பந்தப்பட்டவர் கடுமையான உடல் பாதிப்புக்கு ஆளாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியாவில் கேஸ் பலூன்கள் வெடித்து 31 பேர் காயம்: டெரங்கனு மாநிலத்தில் பலூன்களுக்கு தடை…!!
Next post பாகுபலி-2: பிரபாஸ் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த ராஜமௌலி…!!