உணவிற்காக பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் தொடர்பில் புதிய சட்டம்…!!

Read Time:2 Minute, 16 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90உணவிற்காக பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் தொடர்பில் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

உணவிற்கு பயன்படுத்தப்படும் சகல வகையான எண்ணெய் வகைகள் இறக்குமதி செய்யப்படும் போது அல்லது உற்பத்தி செய்யப்படும் போது அவற்றுக்கான உச்சளவு சில்லறை விலை, உற்பத்தியாளர்களின் பெயர் விபரங்கள், முகவரி என்பன உள்ளடக்கப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2017 மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்படவுள்ளது.

போத்தல்களில், பக்கட்டுகளில் அல்லது வேறும் வகையில் பொதியிடடும் அனைத்து வகையிலான உணவிற்கு பயன்படும் எண்ணெய் வகைகளின் சில்லறை விலை, உற்பத்தி திகதி, காலாவதியாகும் திகதி, நிறை, எண்ணெய் கலவை, சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், உற்பத்தியாளர் பெயர் விபரங்கள், பொதியிடல் விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு 9ம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 10(1)அ சரத்தின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்படும் சில வகை எண்ணெய்கள் தரம் குறைந்த மற்றும் பயன்பாட்டுக்கு பொருத்தமற்றவை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவினை மீறிச் செயற்படும் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டைக்கல்லாறில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி…!!
Next post ரகசிய உறவு: திரை மறைவில் நடக்கும் துரோக நாடகம்…!!