போதைப் பொருளை இல்லாதொழிக்க விசேட புலனாய்வுப் பிரிவு…!!

Read Time:2 Minute, 33 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90போதைப் பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் நாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை முழு அளவில் செயலிழக்கச் செய்யும் நோக்கில் இந்த விசேட புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்படவுள்ளது.

முப்படையினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், சுங்கத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவு ஆகியனவற்றிற்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தி இந்த விசேட புலனாய்வுப் பிரிவு நிறுவப்படவுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சினால் இந்த பிரிவு உருவாக்கப்படவுள்ளது.

ஏற்கனவே மேற்கூறப்பட்ட நிறுவனங்களின் தெரிவு செய்யப்பட்ட புலனாய்வு உத்தியோகத்தர்கள் இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திரட்டப்படும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் பாரியளவிலான போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த தகவல்களை உள்ளடக்கி சர்வதேச புலாய்வுப் பிரிவு அலகு ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஜகத் பீ.விஜேவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த விசேட பிரிவு நிறுவப்படவுள்ளது.

விமானம் மூலம், கப்பல் மூலம் மற்றும் கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போதைப் பொருட்களை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்….!!
Next post அர்ஜூன மகேந்திரன் விவகாரம் : டிசம்பர் மாதம் 25 இல் பாராளுமன்றில் கோப் குழுவின் அறிக்கை…!!