வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி…!!

Read Time:1 Minute, 56 Second

201610210236162489_north-korea-carries-out-second-failed-missile-launch_secvpfவடகொரியா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.

அந்த வகையில் வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்த ‘முசுடன்’ ஏவுகணை சோதனையை நடத்தியது. ஆனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் ‘முசுடன்’ ஏவுகணை சோதனையை நடத்தியது. இருப்பினும் இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

இதுபற்றி தென்கொரிய கூட்டுப்படைகளின் தலைவர் விடுத்து உள்ள அறிக்கையில், வடக்கு பியாங்யாங் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு முசுடன் ஏவுகணை சோதனை நடைபெற்றதாகவும், அந்த ஏவுகணை, தரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறி விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

வடகொரியா இந்த ஆண்டில் 8 முறை முசுடன் ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதும், அவற்றில் ஒன்று மட்டுமே வெற்றி கண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் துருக்கி வான் தாக்குதலில் 200 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு…!!
Next post திரிஷாவுக்கு கணவராகும் டிவி நடிகர்…!!