மாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை எல்லாம் தான் காரணம்…!!

Read Time:3 Minute, 25 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90-1பருவமடைந்த பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது மாதவிடாய், 28-30 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.

ஒருசிலருக்கு 34 நாட்கள் கூட ஆகலாம், இதையும் தாண்டி நாட்கள் தள்ளிபோனாலோ, அல்லது 28 நாட்களுக்கும் குறைவான காலத்தில் அடிக்கடி வந்தாலோ மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கொலஸ்ட்ரால் என்பது பாலின ஹார்மோன்களை சுரக்கும். நாம் தினமும் அளவுக்கு அதிகமாக செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் டயட் போன்ற செயல்களினால் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாக இருக்கும். கொலஸ்ட்ரால் குறைந்தால் ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காது, இதனால் சீரற்ற மாதவிடாய் நிலை உருவாகிறது.

நாம் உடம்பில் ஏற்படும் தைராய்டு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளில் உள்ள வீரியம் ஹார்மோன்களை பாதிக்கச் செய்து மாற்றங்களை உண்டாக்கும். இதனால் மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக இருக்கும்.

ஹார்மோன் உற்பத்திக்கு தேவைப்படும் கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக நம் உடம்பில் அதிகரிக்கும் போது சமநிலையற்ற ஹார்மோன்கள் உருவாகி மாதவிடாயில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களின் அளவு அதிகமாகி இனப்பெருக்க மண்டலம் மற்றும் மாதவிடாய்களில் பலவகையான பிரச்சனைகளை உண்டாக்கிறது.

நம் உடம்பிற்கு தேவையான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமல் இருந்தால், அது ஹார்மோன் சுரப்புகளை பாதித்து, காலதாமதமான மாதவிடாய் பிரச்சனைகள் கொண்டு வருகிறது.

பழங்கள் மற்றும் சத்தான உணவுகள் உட்கொள்ளாததால், நம் உடம்பில் ரத்தம் தேவையான அளவு சுரக்காமல் இருக்கும், இதனால் மாதவிலக்கு தாமதமாக வருகிறது.

பெண்களில் குறிப்பிட்ட வயதிற்க்கும் மேல் உள்ளவர்களின் உடம்பில் மெனோபாஸ் சுருங்குவதால், மாதவிடாய் சீரற்றதாகவும், வராமலும் இருக்கும், இதனால் எவ்வித பிரச்சனைகளும் உண்டாகாது.

strong>இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள்…!!
Next post நம்ம இளைய தளபதிக்கு போட்டியாக ஒருத்தன் வந்துட்டாய்யா… வந்துட்டாய்யா…!! வீடியோ