இரகசியத்தை வெளியிட்டவர் மீது கடும் தாக்குதல்! புதிய சர்ச்சையில் அமைச்சர்…!!

Read Time:1 Minute, 43 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துகள் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச வேலைவாய்ப்புகளை வழங்கும் விதத்தை காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியதே அதற்கான காரணமாகும்.

இதேவேளை குறித்த காணொளியை சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு சுமார் 8 மணியளவிலேயே குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உயரமானவன் பாதுகாவலன் – குட்டையானவன் தொழிலாளி” என கூறி அமைச்சர் சஜித் பிரேமதாச வேலைவாய்ப்பு வழங்கியதாக வெளியான காணொளி பல்வேறு வகையான சர்ச்சையினை எழுப்பியது.

முன்னாள் ஜனாதிபதியும் இது குறித்து கவலை தெரிவித்திருந்ததோடு நல்லாட்சி மீது குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் நடந்த சோகம்..!! வீடியோ
Next post களுவாஞ்சிகுடியில் மோதல்! இருவர் படுகாயம் – இருவர் கைது…!!