கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க கூலான ஐடியாக்கள்…!!
ஆண்களின் கோபம் புகையை போல, பெண்களின் கோபம் எரிமலையை போல. உங்கள் மனைவியின் கோபத்தை எப்படி தணிப்பது என்று யோசியுங்கள். ஒருவேளை உங்கள் மனைவி கோபப்படுவது அர்த்தமற்று இருக்கிறது எனில், உடனே பதில் அளிக்காமல், சற்று நேரம் கழித்து அவர்கள் அமைதியான பிறகு மென்மையாக கூறி புரியவையுங்கள்.
உங்கள் மனைவி கோபப்படும் போது, ஆண் என்ற முனைப்போடு நீங்களும், அதிகமாக பேச வேண்டாம். அந்த சூழலுக்கு ஏற்ப பேச்சை மாற்ற பாருங்கள். அவருக்கு பிடித்தமான செயல்கள் நீங்கள் செய்ததை எடுத்துக் கூறி, சண்டையின் போக்கை வேறுவழிக்கு மாற்றிவிடுங்கள்.
எக்காரணம் கொண்டும் நீங்கள் செய்த செயலுக்கு காரணம் சொல்ல வேண்டாம். ஆண்கள் காரணம் சொல்ல, சொல்ல தான் பெண்களுக்கு கோபம் அதிகமாகும். கோபமாக இருக்கும் போது சிறிது நேரம் மனைவியிடம் எது கேட்காமல் அமைதியாக இருங்கள். முக்கியமாக நீங்கள் அவரது கோபம் நியாமற்றது என நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டாம், பிறகு அணை உடைந்து வெள்ளம் வெளியானால் தடுக்க முடியாது.
தவறு யார் பக்கம் இருந்தாலும் சரி, மனைவி மிகுதியான கோபத்தை வெளிப்படுத்தும் போது, உங்களுக்கும் கோபம் வரும், நீங்கள் எதிர்த்து பேசலாம். ஆனால், அந்த நேரத்தில் கெட்டவார்த்தைகள் பயன்படுத்தி திட்டிவிட வேண்டாம். இது அவர்களை மிகவும் பாதிக்கும்.
அவர்கள் பேச, பேச அதை கேட்காமல், நீங்கள் உங்கள் வேலையை பார்த்து கொண்டிருக்க வேண்டாம். நாம் கோபப்படுவதை கூட கவனிக்காமல் இருக்கிறார் என்பது பெண்களின் கோபத்தில் பெட்ரோல் ஊற்றுவது போல, கொழுந்துவிட்டு எரியும்.
சில சமயங்களில் பெண்கள் கோபப்படுவதே தன் மீது யாரும் சரியாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பதால் தான். எனவே, உங்கள் மனைவி மறைமுகமாக வெளிப்படுத்தும் எண்ணம் என்ன என்பதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களது கோபம் தானாக சரியாகிவிடும்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating