சேலம்: ஷூவில் புகுந்த பாம்பு கடித்தத்தில் மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

Read Time:2 Minute, 35 Second

201610191702539724_salem-private-school-snake-bite-student_secvpfசேலத்தை அடுத்த உடையாப்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்தவர் முரளிதரன். என்ஜினீயராக உள்ளார். தற்போதுதான் அந்தப்பகுதியில் வீடு கட்டி குடிபோனார். இவரது மகன் சத்யாஸ்(வயது 13). இவன் உடையாப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இன்று காலை பள்ளிக்கு சென்று வகுப்பறையில் இருந்தான். ஆசிரியர் பாடம் நடத்திய போது இவன் நெளிந்து கொண்டு இருந்தான். உடனே ஆசிரியர் இவனை விசாரித்த போது காலில் உள்ள ஷூவுக்குள் ஏதோ நெளிவதாக கூறினான். ஆசிரியர் உத்தரவின்பேரில் அவன் ஷூவில் இருந்து காலை வெளியே எடுத்தான், அப்போது காலில் ரத்தம் வடிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் ஷூவை பார்த்தனர். அப்போது இரண்டு அடி நீளம் உள்ள கட்டு விரியன் பாம்பு அதில் இருந்தது. அந்த பாம்பு கடித்ததில்தான் அவனுக்கு ரத்தம் வந்தது தெரிய வந்தது. பின்னர் பள்ளியில் உள்ள ஊழியர்கள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். அதன் பிறகு அந்த மாணவனை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவனை கடித்த பாம்பையும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து டாக்டரிடம் காண்பித்தனர்.

மாணவன் குடியிருக்கும் பகுதியில் ஏராளமான வயல் வெளிகளும், புதர்களும் உள்ளது, இது தவிர வி‌ஷப்பாம்புகளும் அங்கு உள்ளது. நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவன் ஷூவை கழற்றி வாசலில் வைத்து இருக்கிறான். அப்போது கட்டுவிரியன் பாம்பு ஷூவுக்குள் புகுந்து உள்ளது. இதை கவனிக்காத மாணவன் ஷூவை காலில் போட்டு வந்து உள்ளான். பள்ளி வகுப்பறையில் வைத்து அவனை அந்த பாம்பு கடித்து உள்ளது தெரிய வந்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெரினாவில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்து தீப்பிடித்தது: கணவன்-மனைவி, குழந்தை உயிர் தப்பினர்…!!
Next post முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –17)