இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது..!!

Read Time:1 Minute, 50 Second

201610182234336268_conservative-aide-has-been-arrested-for-allegedly-molested-a_secvpfலண்டனில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாலியல் பலாத்கார சம்பவம் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்குள் நடந்து உள்ளது என்று லண்டன் போலீசார் கூறிஉள்ளனர்.

பாலியல் பலாத்கார சம்பவமானது வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்று உள்ளது, மாலையில் சந்தேகத்திற்கு இடமான வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர். வாலிபரின் பெயர் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர் எம்.பி. கிடையாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஜனவரி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே பாராளுமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், இச்சம்பவம் குறித்து எங்களுக்கும் தகவல் தெரியும். விசாரணைக்கு பாராளுமன்றம் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது, விசாரணை நடைபெற்று வருவதால் இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் இப்போது தெரிவிக்கமுடியாது என்றார்.

பாலியல் பலாத்கார சம்பவமானது எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்று உள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடைவெளி எதற்கு?
Next post 3 வயது சிறுமியை கடத்திய திருடனை விரட்டி பிடித்த போலீஸ் கான்ஸ்டபிள்…!!