மாரத்தான் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த 85 வயது கனடா தாத்தா…!!

Read Time:1 Minute, 32 Second

201610181824424909_85-year-old-man-breaks-world-marathon-record_secvpfகனடா நாட்டின் ஸ்காட்டியாபேங்க் டொரான்டோ வாட்டர்பிரண்ட் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 85 முதல் 90 வயதிற்கு இடைப்பட்டோருக்கான பிரிவில் ஒன்டாரியோ மாகாணம் மில்டனைச் சேர்ந்த 85 வயதான எட் ஒயிட்லாக் கலந்து கொண்டார்.

அவர் 25 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 56 நிமிடம் 33 வினாடிகளில் கடந்து உலகச் சாதனைப் படைத்தார். இதற்கு முன் இதே பிரிவில் 4 மணி நேரம் 34 நிமிடம் 55 வினாடிகளில் கடந்ததே உலகச் சாதனையாக இருந்தது.

இவர் ஏற்கனவே கடந்த 2003-ம் ஆண்டு தனது 72 வயதில் 2 மணி 59 நிமிடம் 10 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் 36 உலகச் சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

30 வருடமாக வைத்திருக்கும் பனியனுடனும், 15 வருட பழமையான ஷூவுடனும் ஓடிய எட் வைட்லாக் ‘‘அவற்றுக்கு நல்ல வயதாகிவிட்டது’’ என்று நகைச்சுவையாக கூறினார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எட் வைட்லாக் கடந்த வருடம் நடைபெற்ற மாரத்தானில் கலந்து கொள்வில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது – இளஞ்செழியன் அறிவிப்பு…!!
Next post மெக்சிகோவில் 6 பேரின் கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கி வீசிய கொடூரம்…!!