முஸ்லிம் பெண் கிறிஸ்தவ மதத்துக்கு மாற கோர்ட்டு அனுமதி அளிக்குமா? மலேசியாவில் சர்ச்சை

Read Time:3 Minute, 54 Second

Malaysia.Flag.jpgமலேசியாவைச்சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதற்கு அனுமதிகோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மலேசியாவில் முஸ்லிம், கிறிஸ்துவம், இந்து என பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் மலாய் இனத்தினர் முஸ்லிம்கள் தான்.

அந்த நாட்டில் மதச்சுதந்திரம் இருந்தபோதிலும் இஸ்லாம் மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறுவது என்பது சிக்கலானாது. அது இஸ்லாமியக்கோர்ட்டின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அந்த இஸ்லாமியச்சட்டப்படி, முஸ்லிம் மதத்தை துறப்பது ஜெயில் தண்டனைக்கு உட்பட்டது. வேறு மதத்துக்கு மாறுபவர்கள் புதிய மதத்தின் பெயரை பதிவு செய்ய முடியாது. முஸ்லிம் அல்லாதவரை சட்டப்படி மணக்க முடியாது.

லீனா ஜாய்

இந்த நிலையில் தான் அஸ்லினா ஜெய்லானி என்பவர் மதம் மாறிஇருக்கிறார். இப்போது 42 வயதான இவர் முஸ்லிமாக பிறந்தார். தன் 26-வது வயதில் கிறிஸ்தவராக மதம் மாற தீர்மானித்தார். அவர் தன் பெயரை லீனா ஜாய் என்று மாற்றிக்கொண்டார். 1999-ம் ஆண்டு தேசியப்பதிவுத்துறை அடையாள அட்டையில் அவர் பெயரை லீனா என்று மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தது. ஆனால் அடையாள அட்டையில் அவரது மதம் என்று இஸ்லாமே குறிப்பிடப்பட்டு இருந்தது.

முஸ்லிம் என்ற அடையாளம் மாற்றப்படாதவரை அவர் முஸ்லிம் அல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த குழப்பத்துக்கு காரணமாக இருந்த பதிவுத்துறை மீது அவர் வழக்கு தொடர்ந்தார். அது நீடித்துக்கொண்டே போய் அவர் கடைசியில் மதம் மாற அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை முடிந்து விட்டது. கோர்ட்டு எந்த நேரத்திலும் தன் தீர்ப்பை வழங்கலாம்

தலைவலியாக

கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் என்று கருதப்படுகிறது. கோர்ட்டு தீர்ப்பு மலேசியா அரசுக்கு பெரிய தலைவலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் அடிப்படையான கேள்வி, இந்த நாட்டில் முஸ்லிம் மதம் மாறமுடியுமா என்பது தான். லீனாவுக்கு இந்த வழக்கில் வெற்றி கிடைத்தால் அது மத அடிப்படைவாதிகளின் கைஅரிப்புக்கு ஆயுதம் கிடைத்த கதை ஆகிவிடும். அரசியல் ரீதியாக அது ஒரு அணுகுண்டாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்யும்படி செல்வாக்கு மிக்க அங்கதன்பெலியா இஸ்லாம் மலேசியா என்ற அமைப்பு கோர்ட்டுக்கு எழுதி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடல்நிலை பற்றி காஸ்ட்ரோ வெளியிட்ட தகவல்
Next post லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வாபஸ் ஆனது: கைப்பற்றிய நகரங்களை ஒப்படைத்தது