கள்ள உறவுகள் ஏன்?

Read Time:5 Minute, 19 Second

18-1408337211-cheat8-585x439பறவைகள் அளிக்கும் க்ளூ பறவைகளின் மேட்டிங் பழக்கத்தை ஆராய்ந்து வந்த வடகரோலினா பல்கலைகழக பேராசிரியர் கார்லொஸ் பொட்ரோ அதைப்பற்றி சுவாரசியமான பல தகவல்களை அளிக்கிறார். அவை மனித இனத்துக்கும் பொருந்துபவையாக உள்ளன என அவர் கருதுவது குறிப்பிடதக்கது. பெரும்பாலான பறவைகள் இயல்பாக ஒருதார மணம் புரிபவை.

அதாவது ஒரு ஆண் பறவை இன்னொரு பெண் பறவையை காதலித்தால் அடைந்தால் முட்டை போட்டு, குஞ்சு பொறித்து,குஞ்சுகளுக்கு சிரகு முளைத்து பறக்கும்வரை குடும்பமாக இருந்து கவனித்துகொள்ளும். அதன்பின் மைக்ரேஷனால் பிரிந்தாலும் அடுத்த வருடமும் திரும்பி வந்து அதே இடத்தில் தன் துணையுடன் வாழும். இதை கூர்ந்து ஆராய்ந்ததில் சில பறவைகள் விவாகரத்து செய்வதும் உண்டு என தெரிய வந்ததாம்.

அதாவது மைரேஷன் முடிந்து திரும்பி வந்து புதியதொரு துணையை தேடிகொள்ளும் பறவைகளும் உண்டாம். இதில் கோழிகள் சற்று வித்தியாசமானவை. தன் தந்தை மாதிரி இருக்கும் சேவல்களை அவை வாழ்க்கைதுணையாக தேர்ந்தெடுப்பதில்லை.
தன் தந்தையிடமிருந்து எத்தனை வித்தியாசமாக இன்னொரு சேவல் இருக்கோ அதை தான் வாழ்க்கைதுணையாக தேர்ந்தெடுக்குமாம்.

இப்படி ஒருதார மணம் புரியும் பறவைகளுக்கிடையே மணமுறிவு ஏற்படுவது ஏன் என்பதை கண்டறிய 200 கள்ள உறவு பறவைகளை தொடர்ந்து ஆராய்ந்ததில் கண்டறிந்தது பறவைகள் மணவாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு காரணம் பருவநிலை மாற்றமாம் என. பருவநிலையில் பெரிதாக எந்த மாற்றமும் வராதவரை பறவைகள் தம் வாழ்க்கைதுணையை பிரிவதில்லை. கள்ள உறவு வைத்துகொள்வதில்லை.

ஆனால் சுற்றுபுற சூழலில் திடீரென மாற்றம் வந்தால் அவை இயல்பாக வேறு துனையை தேடி சென்றுவிடுகின்றன. இதன் காரணம் எளிமையானது. ஒரு உதாரணம் பார்க்கலாம்.

அதிக மழை இல்லாத வரட்சி பகுதிகளில் விதைகள் இயல்பாக கெட்டியாக இருக்கும்.அதனால் இயல்பாக இந்த பகுதிகளில் உள்ள பறவைகளுக்கு கெட்டியான மூக்குகள் இருக்கும்.காரணம் அடர்த்தியான கொம்புகள் இருக்கும் பறவைகள் விதைகளை எளிதில் உடைத்து தின்ன இயலும். ஆனால் அதே இடத்தில் திடீரென சில சீசன்களுக்கு மழை அதிகம் வந்தால் விதைகளின் சைஸ் சிறிதாகிவிடும்.அப்போது பெரிய மூக்கு தேவையில்லை.மழையில் பெரிய மூக்கை வைத்துகொண்டு பறப்பதும் சிரமம்.

அதனால் இத்தகைய சூழலில் இனிவரும் சந்ததிகள் பெரிய மூக்குடன் பிறக்காமல் சிறிய மூக்குடன் பிறக்க பெரிய மூக்கு பறவைகள் தன் துணையை பிரிந்து சிறிய மூக்கு பறவைகளுடன் ஜோடி சேர்ந்துவிடுமாம். அதிர்ச்டவசமாக மனித இனத்தில் பருவநிலை மாற்றம் பறவைகளை போல் அத்தனை மாறுதல்களை ஏற்படுத்துவதில்லை.

காரணம் மனிதன் பருவநிலையை கட்டுபடுத்தும் ஆற்றலை அடைந்துவிட்டான். ஆனால் அவனது சூழலில் உருவாகும் மாற்றம் உதாரணமாக பங்கு சந்தை எழுச்சி வீழ்ச்சி போன்றவை பறவைகளுக்கு காலநிலை மாற்றத்தை போன்றவை என்கிறார் கார்லொஸ் பொடிரொ. அஃப்கோர்ஸ் மனித இனத்தில் கலாசாரம், மதம் போன்ற விஷயங்கள் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வேறு விஷயம்.பறவைகளுக்கு வேலை செய்வது மனிதனுக்கும் வேலை செய்யுமா என்பதும் வேறு விஷயம்.ஆனால் நம்மைபோல ஓருதார மணம் புரியும் இன்னொரு உயிரினத்தின் உறவுநிலைகளில் காலநிலை ஏற்படுத்தும் மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கிறது.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்….!!
Next post தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ இயற்கை மருத்துவம்…!!