உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன?

Read Time:2 Minute, 37 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90சத்துக்குறைவு, ஏதேனும் நோய் தாக்கம் காரணத்தினாலேயே திடீரென உடல் எடை குறைகிறது என்பதை நினைவில் கொள்க.

உணவால் திடீரென உடல் எடை குறையாது.

திடீர் உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன?

பட்டினி, பசியின்மை, சத்துணவு இல்லாமை, வலி, கவலை, உறக்கமின்மை, அசதி என்கிற உணவு சார்ந்த காரணங்கள்.

விழுங்குவதில் ஏற்படும் சிரமங்கள், நாக்கு பாதிப்படைவது, தொண்டைக் கோளாறு, அழற்சி மற்றும் கட்டிகள்.

உணவுகளை கிரகிக்க முடியாத தன்மை, தொடர்ந்து வரும் வாந்தி, பேதி, குடல் அடைப்புகள்.

வயிற்றில் புற்றுக் கட்டிகள் இருந்தாலும் உடல் இளைத்துவிடும்.

அல்சர் குடல் அழற்சி, பூச்சிகள், குடல் காச நோய்.

கணையம், கல்லீரல், சார்ந்த கட்டிகள் கணைய அழற்சி, கல்லீரல் சுருங்கி விடுவது.

இதய உள்தசை அழற்சி, இதயச் செயல்பாட்டில் குறைபாடு.

பார்க்கின்சன் வியாதி, முற்றிய டேபஸ் வியாதி, சதை அழிவு நோய்கள்.

நீரிழிவு, தைராய்டு நச்சுத் தன்மை போன்ற நாளமில்லா சுரப்பி சார்ந்த வியாதிகள்.

ஊன்ம ஆக்கச் சிதைவு சார்ந்த பல்வேறு கட்டிகள் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு.

விட்டமின் குறிப்பாக வைட்டமின் பி குறைபாடு.

அடிபடுவது அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் நைட்ரஜன் சீர் குறைவு.

காச நோய், நாள்பட்ட மலேரியா போன்ற தொற்று நோய்கள்.

ரத்தம் சார்ந்த வியாதிகளான லூக்கிமியா, ஏபிளாஸ்டிக் சோகை.

குடிப்பழக்கம், மருந்துகளுக்கு அடிமை, அதிகமாக புகைப்பிடிப்பது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ இயற்கை மருத்துவம்…!!
Next post இராணுவத்தினரின் சித்திரவதைக்கு பயந்து நாட்டை விட்டே தப்பி ஓடிய யாழ் இளைஞன்…!!