ஆல்பம் மேக்கிங்கை வெளியிட்ட ‘ஆங்கில படம்’ இசையமைப்பாளர் ரிக்கோ…!!
ஹிப் ஹாப்’ கலைஞரான ரிக்கோ, இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ‘மய்யம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் திரையுலகினரால் அதிகம் பாராட்டப்பட்டது.
இப்படத்தை தொடர்ந்து ராம்கி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆங்கில படம்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இது முதலில் ‘இங்கிலீஷ் படம்’ என்று பெயரிடப்பட்டு தற்போது ‘ஆங்கில படம்’ என்று மாற்றப்பட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசையும் சமீபத்தில் வெளியானது.
இதில் இடம் பெற்ற ‘இது இங்கிலீஷ் படம்…’ என்ற பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் ரிக்கோவின் இசையை பாராட்டாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவரின் இசை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ரிக்கோ, ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதுவரை 5 ஆல்பங்களை உருவாக்கியுள்ள ரிக்கோ, ‘ஃப்ளோரா ஃப்ளோரா’ (Flora Flora) என்ற ஆல்பத்தின் மேக்கிங் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.
‘ஹிப் ஹாப்’ கலைஞர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ரிகோவின் ‘ஃப்ளோரா ஃப்ளோரா’ ஆல்பம் மேக்கிங் வீடியோ ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு மிகவும் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இவருடைய ஆல்பம் வெற்றியடைய இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் தமன், நடிகை சானியாதாரா, பாடகி வந்தனா உள்ளிட்ட பலர் வாழ்த்தியுள்ளார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating