தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என எச்சரிக்கை…!!

Read Time:2 Minute, 26 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகே தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும் துறையொன்று தொடர்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் ஊடகங்களில் செய்தி அறிக்கையிடப்பட்டிருந்தது.

இவ்வாறு செய்தி அறிக்கையிடும் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடிய வகையில் செய்தி அறிக்கையிடுவதனை தவிர்க்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தைக் கூட நிர்ணயிக்கக்கூடிய இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தில் ஊடகங்களை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பதனை புரிந்து ஒழுக்க விதிகளை மீறாது செயற்பட வேண்டிய தார்மீக கடப்பாடு ஊடகங்களுக்கு உண்டு.

பிழையான அர்த்தப்படுத்தல்களின் ஊடாக பல்வேறு சிக்கல் நிலைமைகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆற்றிய முழு உரையின் சில வசனங்களை மட்டும் எடுத்து செய்தி அறிக்கையிட்டு பிழையான தகவல்களை அர்த்தப்படுத்தல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது ஊடக தர்மத்திற்கு அழகாகாது.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் போற்றப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையான தேவையற்ற அர்த்தப்படுத்தல்களின் ஊடாக கலகம் விளைவிப்பது நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கக் கூடும் என நிமால் போபகே தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழங்காலில் காயம் – மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை…!!
Next post உங்கள் ”திருமண”வாழ்கையை ரசித்து,ருசித்து வாழ – டிப்ஸ்..!!