அட, நம்ம ஆமை, முயல் கதை உண்மை தான் போல… இந்த வீடியோவைப் பாருங்களேன்…!!
சிறுவயதிலேயே நாம் அனைவரும் கேட்ட கதைகளில் முக்கியமானது பாட்டி வடை சுட்ட கதையும், முயல்- ஆமை போட்டி கதையும். இன்றளவும் இந்த கதை அப்படியே தொடர்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் குழந்தைகள் எவ்வளவோ முன்னேற்றங்களைச் சந்தித்தாலும், இந்தக் கதைகளையும் இது தரும் பாடத்தையும் அவர்கள் தவற விடுவதில்லை. அந்தளவிற்கு நம் வாழ்வோடு ஒன்றிப் போனது இந்தக் கதைகள்.
அதிலும் குறிப்பாக முயல் – ஆமை கதையைச் சொல்ல வேண்டும். உடல் அளவில் எவ்வித குறைகள் இருந்தாலும், இலக்கை நோக்கிய தெளிவான பயணம் நிச்சயம் வெற்றியைப் பரிசாகத் தரும் என்பதே இந்த கதையின் கருத்து. இது நாள் வரை கற்பனைக் கதையாக மட்டுமே அறியப்பட்டு வந்த இந்தக் கதையை நிஜத்தில் பரீட்சித்து பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், இது எந்த நாட்டில் நடந்தது எனத் தெரியவில்லை.
நிஜமாகவே ஆமை ஒன்றிற்கும், முயல் ஒன்றிற்கும் போட்டி நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் வேகமாக ஓடும் முயல் பின்னர் தன்னைச் சுற்றிய ஆரவாரங்களால் கவனம் கலைந்து ஒரே இடத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கிறது. ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாத ஆமையோ, சுற்றியுள்ளவர்களின் சத்தத்தை காதில் போட்டுக் கொள்ளாமல் கடமையே கண்ணாக தன் இலக்கை பொறுமையாக அடைந்து வெற்றியடைகிறது.
இனி நம் குழந்தைகளுக்கு இந்த வீடியோவைக் காட்டி ஆதாரப்பூர்வமாக முயல் – ஆமை கதையை நாம் சொல்லலாம்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating