இந்த 5 விஷயத்தை பாலோ பண்ணுங்க! ஆரோக்கியமா இருக்கலாம்…!!
உடல், மனம் மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் நல்ல ஆரோக்கியம் பெறுவதற்கு தினமும் காலையில் எழுந்து மிகவும் எளிதான நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், ஜாக்கிங் ஆகிய ஐந்து பயிற்சிகளைச் செய்தாலே போதும்.
இந்த பயிற்சிகளை நாம் மேற்கொள்ளும் போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிமையான உடற்பயிற்சி, இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எளிதாக செய்யலாம்.
இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராகத் தரும்.
உடல் எடையைக் குறைக்கும்.
மறதி நோய் வராமல் காக்கும்.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
எலும்பு அடர்த்திக் குறைவு (ஆஸ்டியோ பொரோசிஸ்) வராமல் தடுக்கும்.
வைட்டமின் டி அளவை உடலில் அதிகரிக்கச் செய்யும்.
எந்த நோயாக இருந்தாலும், அதன் வீரியத்தைக் குறைக்கும்.
ஜாக்கிங்
ஜாக்கிங் என்பது ஓடுவதை போல இல்லாமலும், நடப்பதை போன்று இல்லாமலும் மெதுவாக சீரான நிலையில் உள்ள பயிற்சி ஆகும்.
மூட்டு வலி உள்ளவர்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளாமல் தடுப்பது சிறந்தது.
எலும்புகளை உறுதியாக்கி தசைகளை வலுவடையச் செய்யும்.
இதயத் துடிப்பை சீராக்கும்.
உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும்.
சீரான ரத்த ஓட்டம் கிடைத்து உடல் புத்துணர்ச்சி அடையும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையை மேம்படுத்தும்.
நீச்சல்
நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின் மூலம் மிதந்து, நகரும் ஒரு வகை உடற்பயிற்சி செயலாகும்.
தொப்பையைக் கரைக்கும்.
மன அழுத்தத்தைப் போக்கும்.
உடல் வெப்பத்தை நீக்கும்.
நாள்பட்ட நோய்களைச் சரிசெய்யும்.
தசைகளை வலுவடையச் செய்து, உடலை உறுதியாக்கும்.
இதயம் மற்றும் நுரையீரலை வலுவடையச் செய்யும்.
பசியின்மையை நீக்கும்.
மூட்டு, கால் பகுதிகளை உறுதியாக்கும்.
ஏரோபிக்ஸ்
இசை ஒன்றை போட்டுக்கொண்டு அதற்கேற்றாற் போல உடலை அசைத்து நடனமாடுவது தான் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி. உடல்பருமனானவர், மூட்டுப் பிரச்னை, முதுகு எலும்பு இருப்பவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்கலாம்.
அதிக அளவில் கலோரி எரிக்கச் செய்யும்.
உடல் எடையைக் குறைக்கும்.
உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கும்.
காய்ச்சல், சளி, தொற்று போன்றவை வராமல் காக்கும்.
இதயம் மற்றும் இதயத் தசைகளை வலுப்படுத்தும்.
கவலை, சோர்வு நீக்கும்.
நீண்ட ஆயுள் கிடைக்கும்.
சைக்கிளிங்
பிற பயிற்சிகள் செய்ய சிரமப்படும் மூட்டுவலி உடையோர் மற்றும் உடல் பருமனாக இருப்போர்கள் எளிதாக செய்ய கூடிய ஒன்றாக மிதிவண்டி ஓட்டுதல் பயிற்சி உள்ளது.
தசைகளை வலுவாக்கி, வலிமைமிக்க உடலாக மாற்றும்.
இதயத் துடிப்பை அதிகப்படுத்தும்.
இதய உறுப்புகளை வலுப்படுத்தும்.
மனம் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும்.
அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எலும்புகள், மூட்டு இணைப்புகள் ஆகியவற்றை வலுவாக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating