மயிலம் அருகே ஆமணக்கு விதைகளை தின்ற 12 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்…!!

Read Time:1 Minute, 36 Second

201610131633445910_12-students-vomit-and-fainting-for-eating-castor-seeds-near_secvpfவிழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஐவேலி கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அஸ்வினி (வயது 6), ஜெகதீஷ்வரன் (11), அபிநயா (7), அபிராமி (6) உள்பட 12 பேர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாரியம்மன் கோவில் திடலில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள ஆமணக்கு செடி விதைகளை பாதாம் பருப்பு என நினைத்து பறித்து தின்றதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

பதறிப்போன பெற்றோர் 10 மாணவ- மாணவிகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 2 பேர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி தாசில்தார் அருங்குளவன், திண்டிவனம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) வீமராஜ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

ஆமணக்கு விதைகளை தின்று 12 மாணவ-மாணவிகள் மயங்கி விழுந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதி விபத்து: 3 மாணவிகள் உயிரிழப்பு…!!
Next post நடத்தையில் சந்தேகம்: தலையை சுவற்றில் மோதி மனைவியை கொன்ற கணவன்…!!