சமாதான தூதராக பணியாற்றிய தமிழர் தலைவர் சுட்டுக் கொலை

Read Time:3 Minute, 22 Second

EPRLF.Kethesh-.jpgஇலங்கை அரசு -விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தும் சமாதான குழுவின் துணை செகரட்ரி ஜெனரலாக இருந்தவர் கேதீஸ் லோகநாதன். அமைதிகுழுவின் இடம்பெற்று இருந்த ஒரே தமிழரான இவர் நார்வே தூதுக்குழு மூலம் அரசு, விடுதலைப்புலிகளுடன் ஒவ்வொரு தடவை பேச்சுவார்த்தை நடத்தும் போதும் அதில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.

கேதீஸ் லோகநாதன் வீடு கொழும்பு புறநகரில் உள்ள தெகிவளையில் உள்ளது. நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் வீட்டில் இருந்தார். அப்போது விடுதலைப்புலிகள் அவர் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் கேதீஸ் லோகநாதன் மீது சரமாரியாக சுட்டனர். ரத்த வெள்ளத்தில் கீழே சாயந்தார். உறவினர்களும், வேலைக்காரர்களும் அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். வழிலேயே அவர் இறந்துவிட்டார்.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேயின் செய்தி தொடர்பாளர் சந்திரபாலா கூறியதாவது:- கேதீஸ் லோகநாதன் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலில் இருந்தார். எனவே இந்த கொலையை விடுதலைப்புலிகள்தான் செய்திருக்க வேண்டும் என்று அதிபர் ராஜபக்சே நம்புகிறார். அவர் கொலைக்கு அதிபர் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறார். அவருக்கு அரசு கடும் பாதுகாப்பு வழங்கி இருந்தது. ஆனால் அவர் தனிப்பட்ட மெய்காப்பாளரை வைத்துக்கொள்ள மறுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கேதீஸ்லோகநாதன் முன்பு பத்மநாப தலைமையிலான ஈ.பி.ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் விவகாரகுழு உறுப்பினராக இருந்தார். ராஜீவ்காந்தி 1984-ல் இலங்கை அரசு- விடுதலைப்புலிகள் இடையே சமாதான முயற்சி செய்தபோது பூட்டானில் உள்ள திம்ïவில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

1995-ல் ஈ.பி.ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பின்னர் நார்வே மூலம் சமரச முயற்சிகள் நடந்தபோது அரசு சமரசகுழு துணை செகரட்ரி ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இவர் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர். ஏராளமான புத்தகங்கள் எழுதி உள்ளார். மனைவி பெயர் பவானி. இலங்கை முன்னாள் மந்திரி லட்சுமண கதிர்காமர் முதலாம் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அவர் பங்கேற்றதுதான் கடைசி நிகழ்ச்சி ஆகும்.
EPRLF.Kethesh-.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்ப்பாணத்தில் பலஇடங்களில் இரு தரப்பும் கடும் மோதல்
Next post பதவி விலகிய கிïபா அதிபருக்கு இன்று 80-வது பிறந்தநாள்