வாழ்க்கைத் துணையுடனும் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே…!!

Read Time:4 Minute, 51 Second

201305170755321183-585x389இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு செயலையுமே நிதானத்துடன் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுகின்றன. ஏனெனில் அந்த அவசரத்தினால், தம்பதியர்கள் இருவரும் சரியாக நிம்மதியுடன் பார்த்து, பேச முடியாத நிலையில் உள்ளனர்.

ஏன் இந்த நிலை காதலர்களுக்குள் கூட உள்ளது. சொல்லப்போனால், ஒரே ஊரில், ஒரே வீட்டில் இருந்தும் கூட இருவரும் ஒன்றாக நேரத்தை செலவழிக்கவோ அல்லது பார்ப்பதற்கோ முடியாத வகையில் உள்ளனர்.

ஆகவே அவ்வாறு இருந்தால், அப்போது அவர்களுடன் ஒன்றாக சில நிமிடங்களாவது இருப்பதற்கு, ஒரு சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து பின்பற்றி, உங்கள் துணையுடன் அந்த நிமிடங்களிலாவது சந்தோஷமாக இருங்களேன்…

உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு மதிய இடை வேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10 நிமிடம் பார்த்தாலும், அது அந்த நாளில் அவர்களுடன் சில நிமிடங்கள் செலவழித்தாலும், அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
நிறைய தம்பதியர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாத நிலையில் உள்ளனர். ஏனெனில் சிலருக்கு நைட் ஷிப்ட் வேலை இருக்கும்.

ஆகவே இந்த மாதிரியான நிலை இருந்தால், முன்கூட்டியே அவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு வாரத்திற்கு 3 முறை ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடுமாறு திட்டங்களைத் தீட்டி யோசித்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டால், இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும ஏற்படாமல் இருக்கும்.

ஒரு வேளை அந்த மாதிரி செயல்பட முடியவில்லையெனில், சனி ஞாயிறுகளில் நிச்சயம் அவர்களுடன் செலவழிக்குமாறு இருக்க வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கும்.

இருவரும் வேலைக்கோ அல்லது காலேஜோ செல்லும் போது தனித்தனியாக செல்லாமல், ஒன்றாக செல்ல வேண்டும். அலுவலகமோ அல்லது காலேஜோ வேறு வேறு இடத்தில் இருந்தால், அவர்களை பைக்கில் அழைத்துச் சென்று விட்டுவிட்டோ அல்லது ஒன்றாக பேருந்திலோ செல்லலாம்.

இருவரில் ஒருவருக்கு ஏதேனும் முடியவில்லை என்றால், அப்போது முன்கூட்டியே திட்டம் தீட்டி, இருவரும் பேசிக் கொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு போடும் போது கட்டாயப்படுத்தாமல், அவர்களது வேலைப்பளுவைப் புரிந்து கொண்டு திட்டம் தீட்டினால் நல்லது. மேலும் அவ்வாறு இருவரும் வெளியே செல்லும் போது, மறக்காமல் மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்துவிடுவது, மேலும் நிம்மதியைத் தரும்.

ஆகவே மேற்கூறியவாறு செயல்பட்டால், வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழித்தது போல் இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கும். முக்கியம் எப்போதும் பொறுமை இருக்க வேண்டும். பொறுமை இருந்தநால், எதனையும் எளிதில் வெல்லலாம். ஒரு வேளை உங்கள் துணை சந்திப்பதற்கு எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் இருந்தால், உங்கள் முடிவு உங்கள் கையில்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்…!!
Next post போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்?.. யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா? (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!