பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்…!!

Read Time:5 Minute, 57 Second

31-1427781331-3-headache-585x439உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு. இஞ்சியை நன்கு காய வைத்து பொடி செய்தால் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பொடி நன்கு மணமாக இருக்கும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால், ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

இந்த சுக்குவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பலரும் இதனை சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்த மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த சுக்கு பொடியைக் கொண்டு வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.
சரி, இப்போது பலரும் அறிந்திராத சுக்குவின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்

சுக்கு ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் நிறைந்துள்ளது. அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால், அதனை சரிசெய்ய, கரும்பு ஜூஸில் சுக்கு பொடியை சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

தலைவலிக்கு நிவாரணி

தலைவலி வரும் போது, அதில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, சுக்கு பொடியில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவ வேண்டும். இதேப்போல் தொண்டை வலி வந்தால், தொண்டையில் தடவுங்கள்.

இருமல்

இருமலுக்கு சுக்கு பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று பலரும் அறிந்ததே. அதிலும் அதனைக் கொண்டு தினமும் 2-3 முறை டீ போட்டு குடித்தால், தொல்லை தரும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால், அப்போது இஞ்சி டீ செய்து, அதில் வெல்லம் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் மூக்கு ஒழுகல் உடனே நின்றுவிடும்.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி அடிக்கடி வந்தால், இளநீரில் சுக்கு பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்கும்

உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அதற்கு 1/2 டீஸ்பூன் சுக்கு பொடியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து, தொப்பையைக் குறைத்து, உடல் எடையை பிட்டாக வைத்துக் கொள்ள உதவும்.
உப்புசம் மற்றும் செரிமானமின்மை

சுடுநீரில் ப்ளாக் உப்பு, சுக்கு பொடி மற்றும் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து குடித்தால், வயிற்று உப்புசம் நீங்கும். 3-4 துளிகள் எலுமிச்சை ஜூஸில், சுக்கு பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து பேஸ்ட் செய்து, நிழலில் உலர வைக்க வேண்டும். பின் அதனை தினமும் அதிகாலை மற்றும் மாலையில் சிறிது உப்பு சேர்த்து உட்கொண்டு வந்தால், வயிற்று உப்புசம், செரிமானமின்மை போன்றவை நீங்கும்.

சிறுநீரக நோய்த்தொற்று

பாலில் சுக்கு பொடி மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் டிரைவர் கடத்தி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை – கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு…!!
Next post திருமணத்திற்கு முன் அது வேண்டாமே…!!