ஞாபகசக்தி குறைவினால் அவஸ்தையா? அப்போ கிரீன் ஆப்பிள் சாப்பிடுங்க…!!

Read Time:3 Minute, 19 Second

green_apple_001-w245பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கிரீன் ஆப்பிளில், நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

சிவப்பு ஆப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்களை விட கிரீன் ஆப்பிள்களின் தோலில் உள்ள சத்துக்கள் மிகவும் அதிகம். இது பலவகையான நோய்களின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கச் செய்கிறது.

மலச்சிக்கல்
கிரீன் ஆப்பிளின் தோல் மற்றும் அதனுடைய சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கிரீன் ஆப்பிள் சாப்பிட்டால், தீராத மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

எலும்புகள் பலவீனம்
கிரீன் ஆப்பிளில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் , பாஸ்பரஸ், காப்பர், மெக்னீசியம், போன்ற முக்கியமான அனைத்து சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது. மேலும் இதிலுள்ள சத்துக்கள் தைராய்டு ஹார்மோனை சுரக்க வைப்பதில் முக்கித்துவம் அளிக்கிறது.

குடல் புற்றுநோய்
கிரீன் ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், நம் குடல் பகுதியில் தங்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, குடலின் இயக்கத்தை பலப்படுத்தி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

வளர்சிதை மாற்றம்
இதிலுள்ள சத்துக்கள் நம் உடலில் உள்ள மிக முக்கிய செயல்பாடாக இருக்கும் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.

உடல் எடை
நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்துகிறது.

அல்சைமர் நோய்
வயதான காலத்தில் ஏற்படும் ஞாபகசக்தி குறைவினால் உண்டாகும் அல்சைமர் நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.

நோய் எதிர்ப்புசக்தி
கிருமிகள் மற்றும் பலவகையான நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பத்தூர் அருகே விபத்து: 2 பேர் பலி…!!
Next post துப்பறிவாளன் அப்டேட்: விஷாலுடன் இணைந்த கமல் மகள்..!!