நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை: ஸ்ரீதிவ்யா…!!
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் நயன்தாராவும், ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கிறார்கள். கோகுல் டைரக்டு செய்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசும்போது, “மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான ‘பாகுபலி’ படம் திரைக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரமாண்ட படமாக காஷ்மோரா தயாராகி உள்ளது. நயன்தாரா மிக சிறந்த நடிகை என்பதை இந்த படத்தில் நிரூபிப்பார். இதற்கு முன்பு எல்லா படங்களிலும் ஸ்ரீதிவ்யா கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படத்தில் நகரத்து பெண்ணாக வருகிறார்” என்றார்.
பாடல் வெளியீட்டு விழா முடிந்ததும் விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
“காஷ்மோரா படத்தின் கதையை டைரக்டர் கோகுல் என்னிடம் சொன்னபோது நயன்தாரா கவுரவ வேடத்தில்தான் வருகிறார் என்றார். அதனால் எனக்கு அவரைப்பார்த்து பயம் ஏற்படவில்லை. அவருக்கு அதிக காட்சிகள் இருக்குமோ என்று மிரளவும் இல்லை. எனது கதாபாத்திரம் எனக்கு திருப்தியாக தோன்றியது. வித்தியாசமாகவும் இருந்தது. இந்த படத்தில் காதல் இல்லை. நானும் நயன்தாராவும் ஒரே நாள்தான் இணைந்து நடித்தோம்.
முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது என்னிடம் நன்றாகவே பேசினார். அவர் அழகாக இருந்தார். இதுவரை பல படங்களில் பாவாடை தாவணியில் நடித்து விட்டேன். அது எனக்கு பொருத்தமாக இருந்தது என்று சொன்னார்கள். இந்த படத்தில் ‘மாடர்ன் கேர்ள்’ ஆக வருகிறேன். நான் அதிக சம்பளம் கேட்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறு. அப்படி யாரிடமும் கேட்கவில்லை. நான் சூர்யாவின் பெரிய ரசிகை. அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் தோன்ற விரும்புகிறேன்.”
இவ்வாறு ஸ்ரீதிவ்யா கூறினார்.
பட விழா நிகழ்ச்சிகளை அஞ்சனா தொகுத்து வழங்கினார். டைரக்டர் கோகுல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating