கருப்பு பண மீட்புக்கு சுவிஸ் நாட்டு ஒத்துழைப்பு தேவை: இந்தியா வலியுறுத்தல்..!!

Read Time:1 Minute, 47 Second

201610070519472481_india-seeks-enhanced-swiss-cooperation-to-tackle-black-money_secvpfஉள்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க தானாக முன்வந்து கருப்பு பண விவரங்களை ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி கடந்த மாதத்துடன் இந்த திட்டம் நிறைவடைந்தது. இதில் அதிக கருப்பு பணத்தை ஒப்புக்கொள்ளச்செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம். எச்சரிக்கை, விளம்பரங்கள் என அனைத்து வகையிலும் வருமான வரித்துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால் துவக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. இறுதி நாளில் அதிகம்பேர் தாக்கல் செய்ததால், 64,275 கோடி மதிப்பிலான கருப்பு பணம் மற்றும் சொத்து விவரங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் நீதி மற்றும் காவல் துறை அமைச்சர் சிமோநெட்டா இந்தியா வந்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சிமோநெட்டா இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, கருப்பு பண பிரச்னைக்கு தீர்வு காண இந்தியர்களின் வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவின் முதலாவது தொங்கும் ரயில்..!!
Next post கண், காது, மூக்கு, நாக்கில் ரத்தம் வழியும் அதிசய பெண்..!! (படங்கள்)