முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை..!!

Read Time:2 Minute, 33 Second

201610062151327239_cm-jayalalithaa-on-the-continued-improvement-of-the-health_secvpfஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து இன்று அப்பல்லோ மருத்துவனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்குவது உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன், எய்ம்ஸ் மருத்துவர்கள் விரிவான ஆலோசனை நடத்தினர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சுவாச கோளாறு, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்குவது உள்ளிட்ட சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சை,சுவாச கோளாறு,தொற்றுநோய்,நீரிழிவு நோய் நிபுணர்கள் கொண்ட குழுவினர் ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஜெயலலிதாவிற்கு இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். நாளையும் எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். தற்போது அளிக்கப்படும் சிகிச்சை தொடர வேண்டும் என சிறப்பு மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் வைத்தியசாலையில்..!!
Next post மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்: சோனம்கபூர்..!!