இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!!

Read Time:2 Minute, 21 Second

201610061342366606_side-effects-of-second-pregnancy_secvpfஒவ்வொரு பெண்ணும் முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி… அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும்.

இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும். முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது கர்ப்பத்தில் பக்க விளைவுகளாக எதிரொலிக்கலாம்.

இரண்டாவது கர்ப்ப காலத்தில் களைப்பு மிக சாதாரணமாக ஏற்படும். முதல் கர்ப்பத்தில் கூட நீங்கள் இவ்வளவு களைப்பை அடைந்திருக்க மாட்டீர்கள்.

முதுகு வலி என்பது எந்த கர்ப்பத்தின் போதும் இயல்பாக வந்து வருத்தும். இரண்டாவது கர்ப்பத்தில் இந்த வலி இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குனியும் போது கூட, முழங்கால்களை மடக்கித் தான் குனிய வேண்டுமே தவிர, முதுகை வளைத்துக் குனியக் கூடாது.

ஒவ்வொரு கர்ப்ப காலத்தின் போதும் இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் திடீரென்று நரம்புகள் பின்னிக் கொள்ளும். எப்போதும் கால்களை நீட்டி வைத்துக் கொள்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலமும் இதைச் சரி செய்ய முடியும்.

உங்கள் முதல் கர்ப்பத்தின் போது நீரிழிவு ஏற்பட்டிருந்தால், இரண்டாவது கர்ப்பத்திலும் இது பக்க விளைவாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் நீரிழிவைத் துரத்தியடிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவுக்கு முன்பு பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!!
Next post திருமண மோதிரத்தை ஆண்குறியில் மாட்டி, பரிதவித்த சீன மாப்பிள்ளை!: பதிவை சிரித்து, சிரித்து ஷேர்செய்யும் சீனர்கள்..!!(படங்கள், வீடியோ)