எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாரபட்சம் காட்டினால் இரண்டு ஆண்டு ஜெயில்..!!

Read Time:1 Minute, 57 Second

201610052217540298_bias-against-aids-patients-to-land-people-in-jail-for-two_secvpfஎய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலையே தற்போது வழக்கத்தில் உள்ளது. உயிர்க்கொல்லி நோயைவிட இந்த பாகுபாடு அவர்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்துகிறது. எனவே, அவர்களின் நலன்கள் மற்றும் உரிமைக்காக, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் மசோதாவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

எச்.ஐ.வி. மற்றும் எய்ஸ்ட் நோயாளிகளை பாரபட்சத்துடன் நடத்தி, அதுபற்றி புகார் தெரிவிக்கப்படுமானால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் இந்த புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.

நோய் பாதிப்பு கண்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் முடிந்தவரையில் டெட்ரோ வைரல் எதிர்மருந்து சிகிச்சை அளிப்பதும் கட்டாயம் ஆக்கவும் இந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிபியாவில் குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 3 பேர் பலி..!!
Next post முதலமைச்சர் உடல்நலக்குறைவால் மனமுடைந்து அ.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு..!!